இரட்டை திரை கொண்ட கைப்பேசியினை அப்கிரேட் செய்து 5G தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்யும் LG

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

உலகப்பிரபல்யம் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான LG ஆனது ஏற்கனவே இரட்டை திரை கொண்ட கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.

இந்நிலையில் குறித்த கைப்பேசியினை அப்கிரேட் செய்து 5G தொழில்நுட்பத்துடன் மீண்டும் அறிமுகம் செய்கின்றது.

V50S எனும் குறித்த கைப்பேசியினை IFA நிகழ்வில் அறிமுகம் செய்திருந்தது.

அத்துடன் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் விற்பனைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

6.4 அங்குல அளவுடைய திரையினைக் கொண்ட இக் கைப்பேசியில் Qualcomm Snapdragon 855 processor மற்றும் 4,000mAh மினகலம் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும் இக் கைப்பேசியின் எடையானது 326 கிராம்களாக காணப்படுகின்றது.

இதன்படி Galaxy Fold கைப்பேசியின் எடையினை விடவும் அதிக எடையைக் கொண்டுள்ளது.

Galaxy Fold கைப்பேசியானது 276 கிராம்கள் எடை உடையதாகும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்