இனி எவரும் ட்ராக் செய்ய முடியாது: அறிமுகமாகியது பயர்பாஸ் உலாவியின் புதிய பதிப்பு

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

இணைய உலாவிகளின் மூலம் ஒருவரின் கணினி செயற்பாடுகளை ட்ராக் செய்யக்கூடியதாக இருக்கின்றமை பெரும் அச்சுறுத்தலாகவே காணப்படுகின்றது.

எனினும் இப் பிரச்னைக்கு மொஸில்லா நிறுவனம் ஏற்கனவே தீர்வு ஒன்றினை வழங்கியிருந்தது.

இதன்படி 20 சதவீதமான பயர்பாக்ஸ் உலாவிப் பயனர்கள் தம்மை ட்ராக் செய்வதில் இருந்து பாதுகாப்பினை பெற்றிருந்தனர்.

ஆனால் தற்போது அனைத்து பயனர்களும் ட்ராக் (Track-கண்காணித்தல்) செய்யப்படுவதிலிருந்து பாதுகாக்கக்கூடிய வசதியை மொஸில்லா நிறுவனம் வழங்கியுள்ளது.

இம் மாதம் 3 ஆம் திகதி அறிமுகம் செய்திருந்த 69 வது பயர்பாக்ஸ் பதிப்பிலேயே இவ் வசதியினை மொஸில்லா நிறுவனம் விஸ்தரித்துள்ளது.

இப் புதிய பதிப்பினை நிறுவிக்கொண்டாலே போதும் குறித்த வசதி தானாகவே அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்