பூமியில் ஒரு செவ்வாய் கிரக பயணம்.. நாமும் செல்லலாம்!

Report Print Kabilan in ஏனைய தொழிநுட்பம்

ஸ்பெயின் நாட்டில் உள்ள குகை ஒன்று, செவ்வாய் கிரக மாதிரி போன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினின் அர்டோண்டோ பகுதியில் குகை ஒன்று அமைந்துள்ளது. இந்த குகை அப்பகுதியில் இருந்து 60 மீற்றர் உயரத்தில், ஒன்றரை கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது.

இந்த குகையை Astroland agency எனும் நிறுவனம், விஞ்ஞானிகள் மற்றும் கட்டடக் கலைஞர்களைக் கொண்டு செவ்வாய் கிரகத்தைப் போல் மாற்றி அமைத்துள்ளது.

இதன்மூலம் இங்கு வருபவர்கள் செவ்வாய் கிரகத்தில் இருப்பது போன்ற அனுபவத்தை பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாகச பயணத்தில் ஈடுபடுபவர்கள் இங்கு மூன்று பகல், இரவை கழிக்கும் வகையில் இந்த குகை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக பயணிக்கும் நபர் ஒருவருக்கு 6,800 அமெரிக்க டொலர்கள் (4 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்) கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பயணத்தில் ஈடுபடுபவர்களுக்கு முன்பாகவே, மூன்று வாரங்கள் Remote training program பயிற்சியும், 3 நாட்கள் உடல் மற்றும் உளவியல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

அத்துடன் பயணங்களை எவ்வாறு மேற்கொள்வது, இயற்கை மிதப்பு சோதனைகளில் பங்கேற்பது என்பதும் கற்றுத்தரப்படுகிறது.

Astroland

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்