அன்ரோயிட் பயனர்களுக்காக ஜிமெயிலில் புதிய வசதியை அறிமுகம் செய்தது கூகுள்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படும் மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்படும் ஜிமெயில் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி ஒன்றினை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஏற்கனவே ஒன்றிற்கு மேற்பட்ட ஜிமெயில் கணக்குகளை பயன்படுத்தும் வசதி அன்ரோயிட் சாதனங்களில் உள்ள ஜிமெயில் அப்பிளிக்கேஷனில் காணப்படுகின்றது.

இதனை இலகுபடுத்தும் முகமாகவே Swipe-to-Switch எனும் புதிய வசதியினை அறிமுகம் செய்துவைத்துள்ளது கூகுள்.

இதன் மூலம் ஒரு ஜிமெயில் கணக்கிலிருந்து மற்றைய ஜிமெயில் கணக்குகளுக்கு இலகுவாக செல்ல முடியும்.

இந்த வசதியானது iOS சாதனங்களில் கடந்த வருடமே அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த வசதியினை அன்ரோயிட் சாதனங்களிலும் தருமாறு பயனர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இதனை அடுத்தே தற்போது அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்தப்படும் ஜிமெயில் அப்பிளிக்கேஷனிலும் குறித்த வசதி தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்