ஒருவரின் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் வயர்லெஸ் ஸ்டிக்கர் உருவாக்கம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

மனிதர்கள் அணிந்து கொள்ளக்கூடிய தொழில்நுட்ப உபகரணங்கள் இன்று அதிக அளவில் உருவாக்கப்பட்டுவருகின்றன.

இதன் தொடர்ச்சியாக தற்போது தோல்போன்றதும், வயர்லெஸ் தொழில்நுட்பத்தினைக் கொண்டதுமான ஸ்டிக்கர் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

மீள்தன்மை கொண்ட இந்த இலத்திரனியல் ஸ்டிக்கர் மூலமாக மனிதனின் நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும்.

அதாவது ஒருவரின் இதயத்துடிப்பு, சுவாச வீதம் மற்றும் தசைகளின் செயற்பாடு என்பவற்றினை ஒரே நேரத்தில் கண்காணிக்க முடியும்.

BodyNet என அழைக்கப்படும் இந்த ஸ்டிக்கரினை ஸ்டன்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

இதனை நேரடியாக தோலில் பொருத்துக்கூடியதாக இருக்கின்றமை மாத்திரமன்றி அணியும் ஆடைகளின் மேற்பகுதியில் பொருத்தி பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றமையும் விசேட அம்சமாகும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்