ATM இயந்திரத்தை அதிகமாக பயன்படுத்துபவரா நீங்கள்? முதலில் இந்த அதிர்ச்சி வீடியோவை பாருங்கள்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

வங்கிகளில் நீண்ட நேரம் காத்திருப்பதற்கு பதிலாக ATM இயந்திரத்தினை பயன்படுத்தும் வழக்கம் இன்று உலகெங்கிலும் அதிகரித்துள்ளது.

அதேநேரம் இதே ATM இயந்திரத்தினை பயன்படுத்தி வங்கிக்கொள்ளையில் ஈடுபடுவதும் அதிகரித்தே வருகின்றது.

இவ்வாறானதொரு அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக தற்போது வீடியோ ஆதாரத்துடன் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதாவது ATM இயந்திரத்தில் உள்ள பொத்தான்களுக்கு மேல் பக்கமாக இரகசியமான முறையில் வீடியோ கமெரா ஒன்று பொருத்தப்பட்டிருந்துள்ளது.

இதன் மூலம் ஒருவர் தனது ATM கார்ட்டிற்குரிய இரகசிய இலக்கத்தை வழங்கும்போது அதனை துல்லியமாக தெரிந்துகொள்ள முடியும்.

டெல்லியில் உள்ள ஒரு ATM இயந்திரத்திலேயே இவ்வாறு கமெரா பொருத்தப்பட்டிருந்தது.

இதனை சாதாரண பிரஜை ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

தற்போது இச் சம்பவம் தொடர்பான வீடியோவை உத்திரபிரதேச பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

இச் சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக இருப்பதுடன் ஏனையவர்களுக்கு ஓர் எச்சரிக்கையாகவும் காணப்படுகின்றது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers