புதிய மைல்கல்லை எட்டி சாதனை படைத்தது Spotify

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

உலக அளவில் பிரபல்யம் அடைந்த ஒன்லைன் ஆடியோ ஸ்ட்ரீமிங் சேவை வழங்கும் நிறுவனமாக Spotify காணப்படுகின்றது.

பல மில்லியன் பயனர்களை தன்னகத்தே கொண்ட இந்நிறுவனம் இவ்வருடம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

அதாவது 2019 ஆம் ஆண்டில் கட்டணம் செலுத்தி இச்சேவையை பெறும் பயனர்களின் எண்ணிக்கை 108 மில்லியனை எட்டியுள்ளது.

அதுமாத்திரமன்றி மாதாந்த மொத்த பயனர் தொகையானது 232 மில்லியனாகவும் காணப்படுகின்றது.

இதில் எஞ்சியவர்கள் Spotify சேவையினை இலவசமாகப் பெறுபவர்கள் ஆகும்.

கட்டணம் செலுத்தி சேவையை பெறுபவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டினை விடவும் 31 சதவீதத்தால் அதிகரித்துள்ளதுடன் மொத்த பயனர் எண்ணிக்கையானது கடந்த ஆண்டினை விட 29 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்