உங்களுடைய ஐபோன் பட்டரியை மாற்ற வேண்டுமா என பார்ப்பது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

ஐபோன்கள் கொள்வனவு செய்யப்பட்டு இரு வருடங்களின் பின்னர் அல்லது அதிலும் குறைவான காலப் பகுதியில் பட்டரிகளை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படலாம்.

இவ்வாறு பட்டரியை மாற்ற வேண்டுமா? இல்லையா? என்பதை சோதிப்பதற்கான வசதி ஏற்கனவே காணப்படுகின்றது.

முதலில் Settings பகுதிக்கு செல்ல வேண்டும். அதில் Battery எனும் Option தரப்பட்டிருக்கும்.

இதை கிளிக் செய்து Battery Health எனும் Option இற்கு செல்லவும்.

அங்கு காணப்படும் Maximum Capacity என்பதன் கீழாக இருக்கும் Peak Performance Capability என்பதில் "Your Battery is currently supporting normal peak performance" என காண்பித்தால் பட்டரி நல்ல நிலையில் இருக்கின்றது மாற்றீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

மாறாக "Your Battery's health is significantly degraded" எனும் செய்தியை காண்பித்தால் பட்டரியை மாற்றீடு செய்வது அவசியம் எனும் முடிவுக்கு வரலாம்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்