புதிதாக 65 ஈமோஜிக்களை அறிமுகம் செய்தது கூகுள்: இவற்றை யார் பயன்படுத்த முடியும் தெரியுமா?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

மொபைல் சாதனங்களில் சட் செய்தல் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்புதல் என்பவற்றில் ஸ்டிக்கர்களை தாண்டி ஈமோஜிக்கள் பிரபலமாக திகழ்கின்றன.

இதனால் பல்வேறு புதிய ஈமோஜிக்கள் தொழில்நுட்ப நிறுவனங்களால் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக கூகுள் நிறுவனம் புதிய 65 ஈமோஜிக்களை அறிமுகம் செய்துள்ளது.

இவற்றினை Android Q இயங்குதளப் பதிப்புடன் இணைத்தே அறிமுகம் செய்கின்றது.

எனவே Android Q இயங்குதளத்தில் செயற்படும் மொபைல் சாதனங்கிளில் மாத்திரமே இவ் ஈமோஜிக்களை பயன்படுத்த முடியும்.

இதேவேளை Android Q இயங்குதளப் பதிப்பானது இவ்வருட இறுதியிலேயே அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்