மனித உயிரைப் பாதுகாக்கும் புதிய இலத்திரனியல் டட்டூ உருவாக்கம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

டெக்ஸாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அதிநவீன இலத்திரனியல் டட்டூ ஒன்றினை உருவாக்கியுள்ளனர்.

இந்த டட்டூவினை அணிந்திருக்கும்போது அது இதயத்தின் ஆரோக்கியம் தொடர்பான தகவல்களை சேகரிக்கின்றது.

இவ்வாறு சேகரிக்கப்படும் தகவல்களைக் கொண்டு இதயத்தில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் அறிந்து சிகிச்சை அளிக்க ஏதுவாக இருக்கும்.

இந்த டட்டூவானது எந்தவிதமான மின்வடங்களும் இன்றி வயர்லெஸ் முறையில் ஸ்மார்ட் கைப்பேசிகளுடன் இணைக்கக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.

இதனை உருவாக்குவதற்கு தெர்மோபிளாஸ்டிக் பொலிவினைலைடின் ப்ளூரைடு மற்றும் கிராபெனின் ஆகிய பதார்த்தங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதனால் உருக்கினை விடவும் 100 மடங்கு வலிமையானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்