Mi மேக்ஸ், Mi நோட் வரிசையில் எவ்வித புதிய வெளியீடுகளும் இருக்காது... ஜியோமி நிறுவனத் தலைவர்!

Report Print Kavitha in ஏனைய தொழிநுட்பம்

ஜியோமி நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி லேய் ஜுன் Mi மேக்ஸ், Mi நோட் வரிசையில் எவ்வித புதிய வெளியீடுகளும் இருக்காது என தெரிவித்துள்ளார்.

இதுபற்றி லேய் ஜுன் கூறுகையில், “Mi மேக்ஸ், Mi நோட் ஆகிய ஸ்மார்ட்ஃபோன் வரிசையில் புதிதாக ஒரு மொபைலையும் அறிமுகப்படுத்தும் திட்டம் ஏதும் இல்லை எனவும் அதற்கு மாறாக, ரெட்மி, Mi MIX சீரிஸ், Mi 9 மற்றும் புதிய CC சீரிஸ் ஸ்மார்ட்ஃபோன்கள் மீது இனி ஜியோமி கவனம் செலுத்தும் என கூறியுள்ளார்.

மேலும் Mi மேக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்ஃபோன்களைப் பொறுத்த வரையில் 6 இன்ஞ் ஸ்கீரினை விட பெரிய ஸ்கிரீன் ஆப்ஷன் தர முயற்சித்து வருகிறது எனவும் புதிதாக அறிமுகமாக உள்ள CC சீரிஸ் ஸ்மார்ட்ஃபோன்கள் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் வகையில் பல டீசர்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது ஜியோமி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers