அடையாளம் காணப்பட்ட அனைத்து போலி கணக்குகளும் அகற்றம்: கூகுள் மேப்...

Report Print Kavitha in ஏனைய தொழிநுட்பம்

இன்று அனைவரும் பயன்படுத்தும் ஆப்ஸ்களில் கூகுள் மேப் மிகவும் பிரபல்யம் வாயந்த ஒன்றாகும்.

அந்தவகையில் கூகுள் வரைபடத்தில் 1 கோடிக்கு மேற்பட்ட போலி வணிக முகவரிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில்The Wall Street Journal என்ற நிறுவனம் போலி வணிக முகவரிகள் தொலைபேசி எண்கள் ஒவ்வொரு மாதமும் பட்டியலிடப்படுவதாக தெரிவித்துள்ளது.

இதன்படி முறையான வணிகர்களைப் போல செயல்பட்டு சந்தேகத்திற்கு இடமின்றி வாடிக்கையாளர்களை மோசடி செய்பவர்கள் இந்த போலிப் பட்டியல்களை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

மேலும் அடையாளம் காணப்பட்ட அனைத்து போலி பட்டியல்களை அகற்றப்பட்டு விட்டதாகவும் போலி விவரங்களை முழுமையாக தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கோண்டு வருவதாக கூகுள் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers