பேஸ் ஸ்டேஷன் (Base Station) என்பது தொலைபேசி வலையமைப்பில் மிக முக்கியமான அம்சமாகும்.
காரணம் இங்கிருந்துதான் ஏனைய டவர்களுக்கு சமிக்ஞைகள் அனுப்பப்படும்.
இவ்வாறான பேஸ் ஸ்டேஷன்கள் 5G தொழில்நுட்பத்திற்கும் அவசியமாகும்.
எனவே சீனாவில் உள்ள பீஜிங் நகரில் மாத்திரம் சுமார் 4,300 பேஸ் ஸ்டேஷன்கள் 5G தொலைபேசி வலையமைப்பினை வழங்குவதற்காக உருவாக்கப்படுகின்றன.
இத் தொழில்நுட்பமானது 4G தொழில்நுட்பத்தினை விடவும் 10 முதல் 100 மடங்கு வேகம் அதிகமாகும்.
எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் இக் காலப் பகுதிக்கு முன்னரே அங்கு 5G வலையமைப்பினை உருவாக்குவதற்கு சீனா மும்முரமாக செயற்பட்டு வருகின்றது.