புகைப்படப்பிடிப்பின்போது Half Shutter பயன்படுத்துவது ஏன் என தெரியுமா?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

இன்று டிஜிட்டல் கமெராக்களின் வருகையை தொடர்ந்து பலருக்கும் புகைப்படக்கலைஞர்கள் ஆகும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

மொபைல் சாதனங்களில் புகைப்படங்கள் எடுக்கக்கூடியதாக இருக்கின்ற போதிலும் DSLR தொழில்நுட்பம் கொண்ட தொழில்முறை (Professional) கமெராக்களில் பல வசதிகள் தரப்பட்டுள்ளன.

இவற்றில் சில தொழில்நுட்ப நுட்பங்களை தொடர்ச்சியாக தருவதற்கு காத்திருக்கின்றோம்.

இதன்படி இன்றைய தினம் Half Shutter பயன்படுத்துவதற்கான காரணத்தை பார்ப்போம்.

Shutter என்பது புகைப்படத்தை எடுப்பதற்காக அழுத்தப்படும் பொத்தான் ஆகும்.

இதனை அரைப்பங்கிற்கு அழுத்துவதையே Half Shutter என அழைக்கின்றோம்.

இவ்வாறு Half Shutter அழுத்துவதனால் பொருட் ஒன்றின் மீதான கமெராவின் பார்வை (Focus) துல்லியமாக்கப்படும்.

அதன் பின்னர் Shutter ஐ முழுமையாக அழுத்தும்போது தெளிவான புகைப்படம் பெறப்படும்.

அவ்வாறில்லாமல் ஒரே நேரத்தில் முழுமையாக அழுத்தும்போது பார்வை சரியாக குவியாமையினால் மங்கலான புகைப்படங்கள் கிடைப்பதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

இந்த நுட்பம் Auto Focus முறைக்கு மிகவும் பொருத்தமானதாகும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers