கூகுள் மேப்பில் சேர்க்கப்படும் மற்றும் இரு புதிய அம்சங்கள்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

பயனர்களுக்கு இலகுவான வழிகாட்டியாக அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் மேப்பில் அதன் பின்னர் மற்றும் சில வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதனால் பயனர்கள் மத்தியில் கூகுள் மேப் வசதியானது அதிக வரவேற்பினைப் பெற்றுள்ளது.

இப்படியான நிலையில் தற்போது மற்றுமிரு வசதிகளை கூகுள் நிறுவனம் உள்ளடக்கியுள்ளது.

இதன்படி பாதைகளில் பயணிக்கும்போது காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் வேக கட்டுப்பாட்டு வீச்சுக்களை (Speed Limits) முற்கூட்டியே தெரிவிக்கும்.

அடுத்ததாக மொபைல் ராடர்கள் உள்ள பகுதிகளை காண்பிக்கும் வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

முன்னர் அமெரிக்காவினை அடிப்படையாகக் கொண்டு இவ் இரு வசதிகளும் பரீட்சிக்கப்பட்டிருந்தன.

அங்கு வெற்றியளித்ததை தொடர்ந்து இந்தியா உட்பட 40 நாடுகளில் இவ் வசதியினை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers