பயனர்களுக்காக கூகுள் அறிமுகம் செய்யும் மற்றும் ஒரு அதிரடி வசதி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

முழு உலகத்தின் அனைத்து தகவல்களையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதே கூகுளின் பிரதான நோக்கமாகும்.

இதனால் பல்வேறு சேவைகளையும் பயனர்களுக்காக அறிமுகம் செய்து வருகின்றது.

இவற்றில் உணவகங்களை இலகுவான முறையில் பயனர்களுக்கு கூகுள் தேடலில் காண்பிக்கக்கூடிய வசதியினை வழங்கி வருகின்றது.

தற்போது இவ் வசதியில் மற்றுமொரு மாற்றத்தை கொண்டுவருகின்றது கூகுள்.

இதன்படி உணவுப்பொருட்களை கூகுளில் தேடும் அதேவேளை கூகுள் ஊடாகவே அவற்றினை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ள முடியும்.

இதே வசதியினை கூகுள் மேப்பிலும் உள்ளடக்குகின்றமை விசேட அம்சமாகும்.

இதற்காக Order Online எனும் பொத்தானை சேர்க்க கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers