அன்ரோயிட் கைப்பேசிகளில் அப்பிளிக்கேஷன்களை தரவிறக்கம் செய்ய முடியவில்லையா? இதோ தீர்வு

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

பல்வேறு கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்கள் இன்று அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளையே வடிவமைத்து வருகின்றன.

இவற்றுக்கான அப்பிளிக்கேஷன்கள் அனைத்தும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்தே பெற்றுக்கொள்ளப்படுகின்றது.

எனினும் சில சமயங்களில் அப்பிளிக்கேஷன்களை தரவிறக்கம் செய்ய முடியாமல் இருக்கும்.

இச் சந்தர்ப்பத்தில் பின்வரும் படிமுறைகளின் அடிப்படையில் முயற்சித்து பார்த்தால் சிறந்த பலனைத் தரும்.

முதலில் ஸ்மார்ட் கைப்பேசியின் Settings பகுதியினை திறக்க வேண்டும்.

அதன் பின்னர் Applications அல்லது Apps எனும் பகுதிக்கு செல்ல வேண்டும்.

அங்கு Google Play Store என்பதை தெரிவு செய்து அதன் Storage பகுதிக்கு சென்று Clear Cache என்பதை தெரிவு செய்யவும்.

இதன் பின்னர் Clear Data என்பதை தெரிவு செய்யவும்.

இவ்வாறு செய்த பின்னர் பிளே ஸ்டோரிலிருந்து அப்பிளிக்கேஷன்களை தரவிறக்கம் செய்வதற்கு அனுமதிக்கும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers