கிரிப்டோகரன்ஸி வடிவமைப்பில் காலடிபதிக்கும் பேஸ்புக்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

ஒன்லைன் ஊடான பணக்கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பொருட்கள் கொள்வனவு என்பவற்றிற்கு கிரிப்டோ கரன்ஸி பயன்படுத்துவது இலகுவாகும்.

எனினும் பிட்கொயின் எனப்படும் கிரிப்டோ கரன்ஸி ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்த நிலையில் பல நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்படாத நாணய அலகாக இருக்கின்றமையே பிரதான காரணமாகும்.

இப்படியிருக்கையில் பேஸ்புக் நிறுவனமானது அங்கீகரிக்கப்பட்ட கிரிப்டோ கரன்ஸிகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

முதற்கட்டமாக லிப்ரா எனும் நிறுவனத்துடன் இணைந்து சுவிட்ஸர்லாந்தில் இந்த நாணய அலகினை வடிவமைக்கின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக 50 பணியாளர்களைக் கொண்ட குழு ஒன்றினையும் பேஸ்புக் உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers