Android Q பீட்டா பதிப்பினை ஸ்மார்ட் கைப்பேசியில் நிறுவுவது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

இன்று உலகளவில் அதிகமான மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்பட்டுவரும் இயங்குதளமாக அன்ட்ரோயிட் காணப்படுகின்றது.

இவ் இயங்குதளமானது இலவசமாகக் கிடைப்பதுடன், இலகுவாக பயன்படுத்தக்கூடியதுமாக இருத்தலே இதற்கு காரணமாகும்.

இவ் இயங்குதளத்தின் புதிய பதிப்பான Android Q இன் பீட்டா பதிப்பினை கூகுள் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது.

இதனை மொபைல் சாதனங்களில் நிறுவிக்கொள்ள முடியும்.

இதற்கு google.com/android/beta எனும் முகவரிக்கு முதலில் செல்ல வேண்டும்.

பின்னர் கூகுள் கணக்கினைப் பயன்படுத்தி லாக்கின் செய்யும்போது குறித்த இயங்குதளப் பதிப்பினை நிறுவக்கூடிய மொபைல் சாதனங்களைக் காண்பிக்கும்.

உங்களது மொபைல் சாதன வகையும் உள்ளடக்கப்பட்டிருப்பின் Enrol பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

இதன் பின்னர் மொபைல் சாதனம் Restart ஆகி Android Q பீட்டா பதிப்பு நிறுவப்படும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers