கூகுளில் குரல்வழி கட்டளைகள் பதிவு செய்யப்படுவதை நிறுத்துவது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

குரல் வழி கட்டளைகள் மூலம் கூகுளில் மேற்கொள்ளப்படும் தேடல்கள் உட்பட ஏனைய செயற்பாடுகளின்போது அனைத்து குரல் கட்டளைகளையும் கூகுள் பதிவு செய்து வைத்திருக்கும்.

எனினும் இதனை நிறுத்தி வைப்பதற்கான வழிமுறையும் தரப்பட்டுள்ளது.

இவ் வசதியினை நிறுத்துவதற்கு கூகுளின் My Activity பக்கத்திற்குள் முதலில் நுழைய வேண்டும்.

பின்னர் 3 குறிகளைக் கொண்ட “hamburger” குறியினை அழுத்தி Activity Controls என்பதை தெரிவு செய்ய வேண்டும்.

தோன்றும் பக்கத்தில் Voice & Audio Activity எனும் வசதிக்கு சென்று அங்கு தரப்பட்டுள்ள நீல நிற பொத்தானை Off செய்ய வேண்டும்.

பின்னர் தோன்றும் பொப்அப் விண்டோவில் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்.

இதன் பின்னர் குரல்வழி கட்டளைகள் எதனையும் கூகுள் சேமிக்காது.

எனினும் மீண்டும் இவ் வசதி தேவைப்படின், மேற்கண்ட படிமுறைகளில் சென்று Voice & Audio Activity கீழ் காணப்படும் பொத்தானை On செய்ய வேண்டும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers