கூகுளில் Location மற்றும் Search History-யினை தானியங்கி முறையில் அழிப்பது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

இணைய உலகில் முன்னணி தேடுபொறியாக கூகுள் விளங்குகின்றது.

இதனால் நாள்தோறும் ஏராளமான தகவல்களை கூகுளின் உதவியுடன் தேடுகின்றோம்.

அதேபோன்று பயணங்கள் மற்றும் இடங்களை சுலபமாக அறிவதற்கு கூகுள் மேப் பயன்படுத்துகின்றோம்.

இவ்விரு சந்தர்ப்பங்களின்போது Location மற்றும் Search History என்பன அப்பிளிக்கேஷன்களில் சேமிக்கப்படும்.

அவற்றினை நீக்குவதற்கான வசதிகளும் காணப்படுகின்றன.

எனினும் அனேகமானோர் இவற்றினை மீண்டும் மீண்டும் நீக்கிக்கொண்டே இருப்பார்கள்.

அவ்வாறில்லாமல் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை தானியங்கி முறையில் இவற்றினை அழிக்க முடியும்.

அதாவது 3 மாதங்கள், 18 மாதங்கள் என்ற அடிப்படையில் அழிக்க முடியும்.

இதனை செயற்படுத்துவதற்கு கூகுள் கணக்கிற்கு முதலில் செல்ல வேண்டும்.

அங்கு உள்ள Data & Personalization என்பதை கிளிக் செய்து Activity controls என்பதன் கீழ் காணப்படும் Manage your activity controls என்பதை தெரிவு செய்ய வேண்டும்.

அதன் பின்னர் Web & App Activity என்பதன் கீழ் காணப்படும் Choose to delete automatically பொத்தானை கிளிக் செய்யவும்.

அப் பகுதியில்,

Keep until I delete manually (default).

Keep for 18 months.

Keep for 3 months.

ஆகிய 3 தெரிவுகள் இருக்கும். இவற்றில் இரண்டாவது அல்லது மூன்றாவது தெரிவினை கிளிக் செய்து Next பொத்தானை கிளிக் செய்யவும்.

தொடர்ந்து Confirm பொத்தானை கிளிக் செய்து, Got it பொத்தானையும் கிளிக் செய்ய வேண்டும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers