கூகுள் மேப்பில் ஒன்றிற்கு மேற்பட்ட தரிப்பிடங்களை ஒரே தடவையில் சேர்ப்பது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

கூகுள் நிறுவனத்தினால் அறிமுகும் செய்யப்பட்ட கூகுள் மேப்பில் பயனர்களுக்கு பயன்தரக்கூடிய பல்வேறு வசதிகள் காணப்படுகின்றன.

அவற்றில் ஒன்றுதான் பயணத்தூரம் மற்றும் பயணப் பாதையை அறிந்துகொள்ளுதல் ஆகும்.

ஒருவர் தாம் இருக்கும் இடத்திலிருந்து பயணிக்க இருக்கும் இடத்தினை காண்பித்துவிட்டால் போதும் பயணத்தூரத்தினை அறிந்கொள்ள முடிவதுடன், அங்கு செல்வதற்கான இலகுவான பாதை, பயணத்திற்கு எடுத்துக்கொள்ளும் அண்ணளவான நேரம் தெரிந்துகொள்ள முடியும்.

இவ் வசதியில் ஒரே நேரத்தில் மேலும் சில தரிப்பிடங்களை சேர்ப்பதன் ஊடாக அவ் விடங்களுக்கான தூரம் மற்றும் பயணப் பாதைகளையும் அறிந்துகொள்ள முடியும்.

இதனைச் செயற்படுத்துவற்கு கூகுள் மேப்பினை திறந்து Directions பொத்தானை கிளிக் செய்யவும்.

பின்னர் இறுதியாக சென்றடைய வேண்டிய இடத்தினை தேடி அவ் இடத்தினை அடையாளப்படுத்தவும்.

அதன்பின் வலது மேல் மூளையில் காணப்படும் மூன்று புள்ளி அடையாளங்களை கிளிக் செய்து Add Stop என்பதை தெரிவு செய்யவும்.

இதன் பின்னர் இறுதி அடைவிடத்திற்கு இடையில் சேர்க்க வேண்டிய மற்றைய தரிப்படங்களை சேர்த்து கொள்ள முடியும்.

அதிகபட்சமாக 9 தரிப்பிடங்களை சேர்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers