அன்ரோயிட் சாதனங்களுக்கான குரோம் உலாவில் சேமிக்கப்பட்டுள்ள கடவுச்சொற்களை பார்வையிடுவது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

உலகளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுவரும் இணைய உலாவியாக கூகுள் குரோம் காணப்படுகின்றது.

இவ் உலாவியல் கடவுச்சொற்களை சேமித்து வைக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.

இதனால் பயனர் கணக்கினை பயன்படுத்தி உள்நுழையவேண்டிய இணையத்தளங்களுக்கு விரைவாக பயணிக்க முடியும்.

அத்துடன் சேமிக்கப்பட்டுள்ள கடவுச் சொற்களை பார்வையிடும் வசதியும் தரப்பட்டுள்ளது.

இதற்கு குரோம் உலாவியின் இறுதியாக அறிமுகம் செய்யப்பட்ட பதிப்பு அவசியம் ஆகும்.

எனவே குரோம் உலாவியினை முதலில் அப்டேட் செய்துகொள்ள வேண்டும்.

அதன் பின்னர் குரோம் உலாவியினை திறந்த Settings பகுதிக்கு சென்று Password வசதியினை தெரிவு செய்யவும்.

அப் பகுதியின் கீழாக சேமிக்கப்பட்டுள்ள கடவுச் சொற்கள் மற்றும் அவை பயன்படுத்தப்பட்ட இணையத்தளங்கள் என்பன காண்பிக்கப்படும்.

கடவுச் சொற்கள் புள்ளி வடிவிலேயே காணப்பம். எனவே தரப்பட்டுள்ள கண் வடிவ ஐகானை கிளிக் செய்து கடவுச் சொல்லினை அறிந்துகொள்ள முடியும்.

இவ்வாறு கடவுச் சொல்லின் உண்மையான வடிவத்தினை பார்வையிடும்போது மொபைல் சாதனத்திற்குரிய கடவுச் சொல் (PIN or Pattern or Finger Print) கொடுக்கவேண்டியது அவசியமாகும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...