கூகுள் அசிஸ்டனில் Voice History ஐ நீக்குவது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

கூகுள் தேடல், விரைவான தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்துதல் உட்பட பல்வேறு செயற்பாடுகளுக்கு பெரிதும் உதவியாக இருப்பது கூகுள் அசிஸ்டன்ட் ஆகும்.

இதன் ஊடாக குரல் வழி மூலம் அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொள்ள முடியும்.

இவ்வாறு செய்யும்போது குரல்கள் சேமிக்கப்பட்டிருக்கும்.

எனினும் சேமிக்கப்பட்ட Voice History இனை நீக்குவதற்கான வசதியும் தரப்பட்டுள்ளது.

இணைய உலாவியில் Voice History-யினை நீக்குவதற்கு பின்வரும் படிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இதன்படி இணைய உலாவியில் myactivity.google.com எனும் முகவரியை தட்டச்சு செய்து குறித்த பகுதிக்கு செல்லவும்.

தோன்றும் திரையில் Delete Activity By என்பதை தெரிவு செய்யவும்.

அங்கு தரப்பட்டுள்ள கால சட்டகத்தில் All Time என்பதை தெரிவு செய்யவும்.

அதன் பின்னர் தோன்றும் Drop-Down மெனுவில் Voice and Audion என்பதை தெரிவு செய்தி Delete பொத்தானை கிளிக் செய்யவும்.

அதன் பின்னர் தோன்றும் பொப்பப் விண்டோவில் மீண்டும் Delete என்பதை கிளிக் செய்து உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

இதேபோன்று ஸ்மார்ட் கைப்பேசிகளில் Voice History இனை நீக்குவதற்கு கூகுள் ஆப்பினை திறக்கவும்.

அதில் தரப்பட்டுள்ள More என்பதை கிளிக் செய்து Search Activity என்பதை தெரிவு செய்யவும்.

இதன்போது தானாகவே myactivity.google.com எனும் முகவரிக்கு செல்லும்.

தோன்றும் திரையில் Delete Activity By என்பதை தெரிவு செய்யவும்.

அங்கு தரப்பட்டுள்ள கால சட்டகத்தில் All Time என்பதை தெரிவு செய்யவும்.

அதன் பின்னர் தோன்றும் Drop-Down மெனுவில் Voice and Audion என்பதை தெரிவு செய்தி Delete பொத்தானை கிளிக் செய்யவும்.

அதன் பின்னர் தோன்றும் பொப்பப் விண்டோவில் மீண்டும் Delete என்பதை கிளிக் செய்து உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்