பேஸ்புக்கில் தரவேற்றம் செய்யப்பட்ட தொலைபேசி இலக்கங்களை அழிப்பது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

பிரபல சமூகவலைத்தளமாக பேஸ்புக்கின் ஊடாக இன்று தனிநபர் தகவல்கள் கசிவது அதிகரித்துள்ளது.

இவை திட்டமிடப்பட்ட வகையிலோ அல்லது தவறுதலாகவோ இடம்பெறுகின்றன.

இவ்வாறே ஸ்மார்ட் கைப்பேசிகளில் சேமிக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களும் பேஸ்புக் வலைத்தளத்தில் தரவேற்றம் செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

இது பயனர்களுக்கு தெரியாமலும் இடம்பெற்றிருக்கலாம்.

எனவே பாதுகாப்பு கருதி இவ்வாறு தரவேற்றம் செய்யப்பட்ட தொலைபேசி இலக்கங்களை அழிக்க முடியும்.

இதற்கு உங்களது பேஸ்புக் கணக்கினுள் உள்நுழைந்த பின்னர் https://www.facebook.com/mobile/facebook/contacts/ எனும் முகவரிக்கு செல்லுதல் வேண்டும்.

அப் பகுதியில் Contacts, Calls and Text History மற்றும் Invitations Sent ஆகிய 3 டேப்கள் காணப்படும்.

இவற்றின் கீழாகக் காணப்படும் Delete All எனும் வசதியினை தெரிவு செய்து ஒரு முறை கிளிக் செய்தவுடன் உறுதிப்படுத்துமாறு கேட்கும்.

உறுதிப்படுத்தியவுடன் அனைத்து தொலைபேசி இலக்கங்களும் அழிக்கப்படும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்