டெலிகிராம் மெசஞ்சரில் அறிமுகம் செய்யப்பட்டுள் புதிய வசதி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

வாட்ஸ் ஆப், பேஸ்புக் மெசஞ்சர் போன்றே டெலிகிராமும் பிரபல்யமான மெசஞ்சர் அப்பிளிக்கேஷன் ஆகும்.

இணைய இணப்பினூடாக மாத்திரமன்றி WiFi இணைப்பு ஊடாகவும் தகவல்களை பரிமாறிக்கொள்ளக்கூடிய வசதி டெலிகிராமில் காணப்படுகின்றது.

இவ்வாறான சிறப்பம்சத்தினைக் கொண்ட அப்பிளிக்கேஷனில் புதிய வசதி ஒன்று தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி அனுப்பப்படும் தகவல்களை அனுப்புனரின் சாதனத்திலிருந்தும், பெறுபவர்களின் சாதனங்களில் இருந்தும் அழிக்க முடியும்.

அத்துடன் ஒரு செய்தியை மற்றவர்களுடன் பகிரக்கூடிய விதிமுறைகளையும் மாற்றியமைக்கக்கூடிய வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்