eBay தளத்தில் பணம் செலுத்துவதற்கு புதிய வழிமுறை

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

உலகின் முன்னணி மின் வர்த்தக தளமான eBay இல் பொருட்களை கொள்வனவு செய்யும்போது அதற்கான பணத்தினை கிரடிட் கார்ட்கள் மூலமாகவோ அல்லது paypal மூலமாகவோ செலுத்தக்கூடியாக இருந்துவருகின்றது.

எனினும் 2015 ஆம் ஆண்டிலிருந்து paypal நிறுவனத்திற்கும், eBay நிறுவனத்திற்கும் இடையில் சுமுகமாக உறவு காணப்படவில்லை.

இதன் காரணமாக paypal மூலமான பணப்பரிமாற்றத்தினை தவிர்க்க eBay நிறுவனம் முயற்சித்து வந்தது.

தற்போது மற்றுமொரு பிரபல ஒன்லைன் பணப்பரிமாற்ற சேவையான கூகுள் பேயினை பயன்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாத ஆரம்பத்திலிருந்து இவ் வசதியின் ஊடாக eBay தளத்தில் பணம் செலுத்தி பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்.

எவ்வாறெனினும் 2021 ஆம் ஆண்டு முதல் eBay நிறுவனம் தான் சொந்தமாகவே ஒரு ஒன்லைன் பணப்பரிமாற்ற சேவையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers