இன்று பயன்பாட்டிலுள்ள பல மொபைல் அப்பிளிக்கேஷன்களும் பயனர்களின் இருப்பிடத்தினை இரகசியமாக கண்காணிக்கின்றன.
முன்னர் பயனர்களின் அனுமதியுடன் அவர்களின் இருப்பிடம் அப்பிளிக்கேஷன்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது அனுமதியின்றி பின்னணியில் இரகசியமாக கண்காணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே இவ்வாறு பின்னணியில் கண்காணிக்கப்படுவதையும் பயனர்கள் நிறுத்தக்கூடிய வகையில் பேஸ்புக் நிறுவனம் தனது அப்பிளிக்கேஷனில் புதிய செட்டிங் வசதியினை அறிமுகம் செய்துள்ளது.
இவ் வசதியானது தற்போது அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்தப்படும் பேஸ்புக் அப்பிளிக்கேஷன்களில் மாத்திரமே கிடைக்கப்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.