ஆப்பிளின் புதிய இயங்குதளப் பதிப்பை அப்டேட் செய்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

ஆப்பிள் நிறுவனமானது தனது மொபைல் சாதனங்களுக்காக iOS இயங்குதள பதிப்பினை அறிமுகம் செய்துள்ளது.

iOS 12.1.3 எனும் இப் பதிப்பினை நிறுவியவ பல பயனர்கள் டேட்டா இணைப்பினை ஏற்படுத்த முடியாமல் திணறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பயனர்கள் சார்பில் பல புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதமும் ஆப்பிள் நிறுவனம் iOS 12.1.2 பதிப்பினை அறிமுகம் செய்திருந்தது.

குறிப்பாக அமெரிக்காவை சேர்ந்த பயனர்கள் பலர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அமெரிக்காவின் Sprint மற்றும் AT & T தொலைபேசி வலையமைப்பினை பயன்படுத்தி வருகின்றவர்கள்.

இப்பதிப்பிலும்கூட கைப்பேசியில் Root பிரச்சினை காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இப் பிரச்சினைக்கு ஆப்பிள் நிறுவனம் தீர்வு காணும் வரையில் புதிய பதிப்பினை நிறுவாது தவிர்ப்பதே சிறந்தது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்