கூகுள் அஸிஸ்டன்ட் சாதனம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான செய்தி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

கூகுள் அஸிஸ்டன்ட் (Google Assistant) என்பது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு சாதனமாகும்.

மனிதர்களின் கட்டளைகளுக்கு ஏற்ப பல்வேறு செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய இச் சாதனம் தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது இச் சாதனமானது இரு வேறு மொழிகளைக் கொண்ட நபர்கள் உரையாடும்போது அதனை சிறப்பாக மொழிபெயர்த்து தரக்கூடியது.

தற்போது இவ்வாறு மொழிபெயர்க்கக்கூடிய மொழிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி உலகளவில் காணப்படக்கூடிய 27 வகையான மொழிகளை மொழிபெயர்ப்பு செய்யக்கூடியதாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வசதி அடுத்த ஓரிரு வாரங்களில் அனைத்து கூகுள் அஸிஸ்டன்ட் சாதனங்களிலும் கிடைக்கப்பெறும் என கூகுள் தனது ப்ளாக்கில் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers