2019 ஆம் ஆண்டில் தனது தனிப்பட்ட சவால் என்ன என்பதை வெளியிட்ட மார்க்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

பேஸ்புக் நிறுவனரான மார்க் ஷுக்கர் பேர்க் அண்மைக்காலமாக பாரிய சவால்களை எதிர்கொண்டு வருகின்றார்.

இதற்கு காரணம் பேஸ்புக் வலைத்தளத்தினூடாக இடம்பெறும் எல்லை மீறிய செயற்பாடுகளும், பயனர்களின் தகவல்கள் கசிதலுமாகும்.

இப்படியான நிலையில் 2019 ஆம் ஆண்டு தனது திட்டம் என்ன என்பதை தற்போது அவர் வெளியிட்டுள்ளார்.

இதன்படி சில வாரங்கள் தொடர்ச்சியாக பயனர்களுடன் வெளிப்படையான விவாதங்களில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த விவாதங்கள் பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் ஊடாக இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனர்களுடன் மாத்திரமன்றி தலைவர்கள், நிபுணர்களுடனும் இவ்வாறு விவாதங்களில் ஈடுபடவுள்ளார்.

இந்த விவாதங்கள் அனைத்தும் எதிர்கால தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டு அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers