அன்ரோயிட் இயங்குதளம் எட்டிய புதிய மைல்கல்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

கணினி உலகை ஆக்கிரமிக்கும் இயங்குதளமாக விண்டோஸ் காணப்பட்டு வருகின்றது.

விண்டோஸ் என்ற வார்த்தைக்கு அடுத்ததாக அதிகமாக உச்சரிக்கப்பட்டுவரும் சொல்லாக அன்ரோயிட் காணப்படுகின்றது.

அந்த அளவிற்கு பல்வேறு வகையான இலத்திரனியல் சாதனங்களிலும் இவ் இயங்குதளம் இடம்பிடித்துள்ளமை ஆகும்.

இவ் இயங்குதளம் முதன் முறையாக 2008 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டு இந்த வருடத்துடன் 10 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் பல்வேறு பதிப்புக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இன்று உலகெங்கிலும் சுமார் 2 பில்லியனிற்கும் அதிகமான இலத்திரனியல் சாதனங்களில் அன்ரோயிட் இயங்குதளம் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்