ஒரே இரவில் கண்ணாடியிழைகளைப் பயன்படுத்தி பாரிய கூடொன்று கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. இது இயற்கையில் கட்டியெழுப்பப்பட்ட கூடல்ல.
பைபர்போட்ஸ் (Fiberbots) எனப்படும் ரோபோக்களினாலேயே கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது.
இவ்வகை ரோபோக்கள் எதிர்காலத்தில் கட்டட மற்றும் பால கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தக்கூடிய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒவ்வொரு பைபெர்போட்ஸ் ரோபோக்களும் 30 சென்ரிமீட்டர் உயரமானவை.
இவற்றின் மெல்லிய கைககள் ரோபோக்களின் உடலின் மேற்பகுதியில் அமைந்துள்ளன.
இக் கைகளைப் பயன்படுத்தி கண்ணாடியிழைகளை தன்னைச்சுற்றி முறுக்குவதன் மூலமாக கூட்டினை வடிவமைத்துக் கொள்கின்றன.
இவை முதலில் 8 சென்ரிமீட்டர் நீளமான பகுதியை உருவாக்கிய பின்னர், முன்நோக்கி தவழ்ந்து கூட்டின் மீதிப் பாகத்தை வடிவமைத்துக்கொள்கின்றன.