இனி Wi-Fi இனைப் பயன்படுத்தி ஆயுதங்களைக் கண்டுபிடிக்கலாம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

நீங்கள் அநேகமாக உங்கள் கைத் தொலைபேசி, கணனி மற்றும் ஏனைய இலத்திரனியல் சாதனங்களை Wi-Fi மூலம் உலகளாவிய இணைய வலையுடன் இணைக்கக் கூடும்.

மிக விரைவில் இதே தொழில்நுட்பம் பொது இடங்களில் உங்களை பாதுகாப்பாக வைத்திருக்க உதவப்போகின்றது என்பது தான் முக்கிய விடயம்.

Rutgers பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து, சாதாரண Wi-Fi ஆனது பைகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள், வெடிபொருட்கள், வெடிபொருள் இரசாயனங்களை மிக்க குறைந்த செலவில், மிக வினைத்திறனாகக் கண்டுபிடிக்கின்றன என அறியப்பட்டுள்ளது.

இவ் ஆய்வு ஆய்வாளர்களுக்கு 2018 இன் IEEE Conference on Communications and Network Security மாநாட்டில் சிறந்த ஆய்வுக்கான விருதையும் பெற்றுக்கொடுத்திருக்கிறது.

இவர்களது ஆய்வின்படி அதிக ஆபத்தான பொருட்கள் உலோகம் அல்லது திரவங்களைக் கொண்டுள்ளது.

ஏதோ ஒரு வழியில் இவ் உலோகங்கள் Wi-Fi சழிக்ஞையுடன் குறுக்கிடுகிறது. அதை ஆய்வாளர்களால் கண்டுபிடிக்க முடிகிறது.

அதேநேரம் ஒருவர் இவ் வெடிபொருட்களை மறைத்து வைத்திருக்கப் பயன்படுத்தும் பையானது பேப்பர் அல்லது நார் போன்ற பொருட்களால் ஆக்கப்பட்டிருக்கும். இது போன்ற திரவியங்களினூடு Wi-Fi சமிக்ஞை இலகுவாகப் பயணிக்கின்றது.

ஆய்வாளர்கள் தங்களது ஆய்வுக்கென Wi-Fi ஆயுத கண்டுபிடிப்பு தொகுதியொன்றை உருவாக்கியிருந்தனர். இது பொருட்களை எதிர்கொள்ளும் போது Wi-Fi சமிக்ஞைக்கு என்ன நடக்கின்றது என்பதைக் கண்டறிகிறது.

இவர்கள் அத் தொகுதியை 15 வெவ்வேறு பொருட்கள் மற்றும் 6 வகை பைகளில் ஆராய்ந்த போது அது ஆபாத்தான மற்றும் ஆத்தில்லாத பொருட்களை வேறுபடுத்திக் காட்டியிருந்தது.

இதனால் 90 வீதமான ஆபாத்தான பொருட்களை க் கண்டுபிடிக்க முடியும் என சொல்லப்படுகிறது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்