மார்க் ஸுக்கர்பேர்க் என்ன செய்யப் போகிறார்?

Report Print Deepthi Deepthi in ஏனைய தொழிநுட்பம்

உலகின் மிக பெரிய நிறுவனங்களுள் ஒன்றாக திகழும் பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஸுக்கர்பேர்க் மற்றும் அவரின் மனைவி சானுக்கு கடந்த டிசம்பர் மாதம் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

அதே சமயத்தில் இந்த பில்லியன் தம்பதியினர் உலகுக்கு நன்மை அளிக்கும் தங்களின் வருங்கால கனவுத் திட்டங்களை செயற்படுத்த “சான் ஸுக்கர்பேர்க்" என்னும் தன்னார்வ நிறுவனத்தைத் தொடங்கினர்.

  • அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் $600 மில்லியன் மதிப்பீட்டில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், கலிபோர்னியா-சான் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகம் மற்றும் பிரபல பேராசிரியர்கள் தலைமையில் 'பயோஹப்' எனப்படும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
  • இந்த மையத்தின் மூலம் உலகை அச்சுறுத்தி வரும் ‘ஜிகா’ போன்ற சமீபத்திய கிருமிகளுக்கும் தீர்வை கண்டறியவும் பயன்படுத்தப்படும்.
  • பொதுவான மருத்துவ ஆராய்ச்சி முறைகளுக்கு மாற்றாக, செயற்கை நுண்ணறிவு கொண்ட மென்பொருள்கள் மூலம் நோய்கள் வந்த பின்னரும், வருவதற்கு முன்னரும் கண்டறியவும், குணப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
  • மேலும், சிக்கலான நரம்பு, இரத்தம், செல்கள் சம்பந்தமான நோய்களுக்கான சிகிச்சை முறையும் மேம்படுத்த ஆராச்சிகள் மேற்கொள்ளப்படும்.
  • உலகம் முழுவதும் உள்ள அறிவியல் விஞ்ஞானிகள் மற்றும் பல்வேறு துறை வல்லுநர்களை ஒன்றிணைத்து “சேலஞ்ச் நெட்ஒர்க்” ஒன்று உருவாக்கப்படும்.
  • மனித ஆற்றலை மேம்படுத்தவும் மற்றும் மக்களிடையே உடல்நலம், கல்வி, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் பல்வேறு துறையில் சமத்துவத்தை உயர்த்த திட்டங்கள் செயற்படுத்தப்படும்.
  • கடந்த ஜூன் மாதம் ஆப்பிரிக்காவை சேர்ந்த என்ஜினீர்களுக்கு பயிற்சி அளித்து தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியமர்த்தும் ‘அன்டெலா’ என்னும் நிறுவனத்திற்கு $24 மில்லியனும், இம்மாத தொடக்கத்தில் இந்தியாவை சேர்ந்த வீடியோ வழி கல்வி கற்றல் நிறுவனமான ‘பைஜூவிவிற்கு’ $50 மில்லியனும் அளித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments