வெடித்து சிதறிய ராக்கெட்: பேஸ்புக்கின் செயற்கைக்கோள்கள் எரிந்து சாம்பல்!

Report Print Basu in ஏனைய தொழிநுட்பம்

அமெரிக்காவில் நாளை விண்ணில் செலுத்துவதற்கு தயாராக இருந்து ராக்கெட் ஒன்று வெடித்து சிதறியுள்ளது.

இந்த விபத்தில் ராக்கெட்டில் இருந்த பேஸ்புக்கின் செயற்கைக்கோள்கள் எரிந்து சாம்பலாகியது.

பேஸ்புக் நிறுவனத்தால் ஆமோஸ்-6 செயற்கைகோள் சில மாதங்களுக்கு முன் இருந்தே ஆரம்பிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.

அதை விண்ணில் செலுத்துவதற்காக உலகின் முன்னணி தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள 'கேப்கனவெரல்' மையத்தில் இருந்து ஸ்பேஸ்-எக்ஸ்ஸின் பால்கான்-9 என்னும் ராக்கெட்டின் மூலம் நாளை விண்ணில் செலுத்துவதற்கான பரிசோதனைகள் நேற்று நடந்து கொண்டிருந்தன.

அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அந்த ராக்கெட் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதற தொடங்கியது. அந்த விபத்தில் அந்த ராக்கெட்டுடன் பேஸ்புக்கில் இருந்த 6 செயற்கைக்கோள்களும் முற்றிலுமாக அழிந்தது. விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

இதுகுறித்து மார்க் ஸக்கர்பேர்க் கூறியதாவது, பல விதமான மக்களுக்கு பலன் அளித்திருக்க வேண்டிய இத்திட்டம் இந்த விபத்தால் தோல்வி அடைந்திருப்பதால் தான் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், அதே வேளையில் பேஸ்புக்கின் மற்ற தொழில்நுட்ப திட்டமான 'அக்யூலா' மூலம் தங்களின் இலக்கை அடையும் வரை தொடர்ந்து பணி செய்வோம் என தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தின் மூலம் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்திற்கு ஒரே நாளில் கிட்டத்தட்ட 390 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments