மாகாண ரீதியிலான கரப்பந்தாட்டத்தில் சம்பியனாகியது ஆவ­ரங்­கால் மத்தி அணி!

Report Print Samaran Samaran in ஏனைய விளையாட்டுக்கள்

புத்­தூர் கிராம சபை­யின் முன்­னாள் உப­த­லை­வர் அரி­ய­குட்­டி­யின் நூறா­வது பிறந்த தினத்தை முன்­னிட்டு நடத்­தப்­ப­டும் மின்­னொ­ளி­யி­லான கரப்­பந்­தாட்­டத் தொட­ரில் ஏ பிரி­வில் ஆவ­ரங்­கால் மத்­திய விளை­யாட்­டுக் கழக அணி சம்­பி­ய­னா­னது.

புத்­தூர் வளர்­மதி விளை­யாட்­டுக் கழக மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் ஆவ­ரங்­கால் இந்து இளை­ஞர் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து ஆவ­ரங்­கால் மத்­திய விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது.

ஐந்து செற்­க­ளைக் கொண்­ட­தாக இறு­தி­யாட்­டம் அமைந்­தது.

முதல் மூன்று செற்­க­ளை­யும் முறையே 26:24, 25:23, 25:21 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் கைப்­பற்றி 3:0 என்ற நேர்­செற் கணக்­கில் கிண்­ணம் வென்­றது ஆவ­ரங்­கால் மத்­திய விளை­யாட்­டுக் கழக அணி.

பரி­ச­ளிப்பு நிகழ்­வுக்கு முதன்மை விருந்­தி­ ன­ராக யாழ்ப்­பா­ணம் மாந­க­ர­சபை முதல்­வர் இ.ஆனல்ட், மதிப்­புறு விருந்­தி­னர்­க­ளாக வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான ச.சுகிர்­தன், வே.சிவ­யோ­கன், யாழ்ப்­பாண மாவட்ட கரப்­பந்­தாட்­டச் சங்­கத்­தின் தலை­வர் கி.மனோ­க­ரன், வளர்­மதி சன­ச­மூக நிலை­யத்­தின் போச­கர் ஆ.தங்­க­ராசா, வலி­கி­ழக்கு பிர­தேச சபை உறுப்­பி­னர் சி.திரு­நா­வுக்­க­ரசு ஆகி­யோர் கலந்து கொண்­ட­னர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்