அளவுக்கு அதிகமான தங்கத்தை வைத்திருந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்! விமான நிலையத்தில் ஏற்பட்ட பரபரப்பு

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
629Shares

மும்பை விமான நிலையத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் குருணால் பாண்ட்யாவை அதிகாரிகள் திடீரென நிறுத்தி சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஐபிஎல் தொடர் நிறைவடைந்ததை அடுத்து அமீரகத்தின் பயோ பபுளில் இருந்து அனைத்து வீரர்களும் அவரவர் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர்.

அதில் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் துபாயிலிருந்து நேரடியாக அவுஸ்திரேலியா செல்கின்றனர்.

இந்நிலையில், குருணால் பாண்ட்யா துபாயிலிருந்து மும்பை திரும்பிய நிலையில், மும்பை விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு இயக்குனராக அதிகாரிகளால் திடீரென தடுத்து நிறுத்தப்பட்டார்.

அளவுக்கு அதிகமாக தங்க நகைகள் மற்றும் விலைமதிப்புமிக்க பொருட்களை அவர் வைத்திருந்ததால் சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தப்பட்டதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்