நான் இதை சொன்னதும்... முரளிதரன் சொன்ன ரகசியம்- விஜய்சேதுபதி பேட்டி

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார்.

டிஏஆர் மோஷன் பிச்சர்ஸ் தயாரிக்கும், இப்படத்திற்கு ‘800’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் படப்பிடிப்புகள் தொடங்கவுள்ள நிலையில், 2021ம் ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விஜய்சேதுபதி அளித்துள்ள பேட்டியில், சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் போட்டியை நான் பார்க்க மாட்டேன், எனக்கு என்னவோ அந்த போட்டி போர் அடிக்கும்.

இதை நான் முரளிதரனிடம் கூறியதும், நீங்கள் தான் சரியான நபர் என இப்படத்திற்கு என்னை தேர்வு செய்தார் என தெரிவித்துள்ளார்.

மேலும் உடல்எடையை குறைப்பதற்காக பயிற்சியாளர் நியமிக்கப்பட்டாலும், தற்போதைய சூழலில் படத்துக்காக எடையை குறைப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்