மீண்டும் போட்டிகளில் களமிறங்க தயார்: உசைன் போல்ட்

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்

மீண்டும் களமிறங்க தயார் என உசைன் போல்ட் அறிவித்துள்ளதால் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சயில் ஆழ்ந்துள்ளனர்.

உலகின் மின்னல் வேக வீரராக வலம் வந்த ஜமைக்காவின் உசேன் போல்ட் ஒலிம்பிக்கில் 8 தங்கப்பதக்கமும், உலக தடகளத்தில் 11 தங்கப்பதக்கமும் அறுவடை செய்த மகத்தான சாதனையாளர் ஆவார்.

100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் அதிவேகமாக ஓடிய உலக சாதனையும் இவரது வசமே உள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார், சமீபத்தில் பெண் குழந்தைக்கு தந்தையான உசைன் போல்ட் அளித்துள்ள பேட்டியில், எனது பயிற்சியாளரான கிளைன் மில்ஸ் என்னிடம் வந்து மறுபிரவேசம் என்று கூறினால் அதற்கு தயார்.

அவர் மீது நான் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன், அவர் அழைத்தால் மறுபடியும் போட்டிகளில் களமிறங்க தயார் என அறிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்