செரீனா வில்லியம்ஸை பின்னுக்கு தள்ளிய ரெனிஸ் வீராங்கனை! எதில்?

Report Print Abisha in ஏனைய விளையாட்டுக்கள்
146Shares

அதிகமாக சம்பாதிக்கும் வீராங்கனைகள் பட்டியலில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸை பின்னுக்குத் தள்ளினார் ஒசாகா.

உலகளவில் அதிகமாக சம்பாதிக்கும் ரெனிஸ் வீராங்கனை என்ற பெருமையை ஜப்பான் வீராங்கனை ஒசாகா பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு ஒசாகா 37.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சம்பாதித்துள்ளார். இதன் மூலம் பணக்கார விளையாட்டு வீராங்கனை என்ற பெருமையை நான்கு ஆண்டுகளாக வகித்து வந்த செரீனா வில்லியம்சை (36 மில்லியன் அமெரிக்க டொலர்) ஒசாகா முந்தினார்.

மரியா ஷரபோவா 2015-ம் ஆண்டு 29.7 மில்லியன் டொலர் சம்பாதித்திருந்தார். இதுதான் டென்னிஸ் வீராங்கனையின் ஒரு வருடத்தின் அதிக வருமானமாக இருந்தது. தற்போது ஒசாகா அதை முறியடித்துள்ளார்

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்