கொரோனா பாதிப்புக்கு ரூ 1 லட்சம் கொடுத்த டோனி! ரூ 800 கோடிக்கு சொந்தகாரர் இப்படி செய்யலாமா என விமர்சனம்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் டோனி கொரோனா பாதிப்புக்கு ரூ 1 லட்சம் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவரை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு பின் இந்திய அணியில் தோனி இடம்பெறவில்லை. ஆனால் அவர் எப்போது மீண்டும் இந்திய அணியில் இடம்பெறுவார் என்று ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஐ.பி.எல் தொடர் உள்ளிட்ட அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அதிக நிதி தேவைப்படுவதால் பொதுமக்கள், பிரபலங்கள் பலர் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர்.

இதற்கிடையே இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி புனேவை சேர்ந்த தன்னர்வ தொண்டு நிறுவனம் மூலம் ரூ 1 லட்சம் ரூபாய் நிதி கொடுத்து உள்ள தகவல் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் வீரர்களான சச்சின், கங்குலி ஆகிய இருவரும் 50 லட்சம் கொடுத்துள்ள நிலையில் ரூ 800 கோடி சொத்து வைத்துள்ள டோனி இவ்வளவு குறைவாகவா நிவாரணம் கொடுப்பது என பல ரசிகர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இதோடு பள்ளி மாணவன் ஒருவன் தனது சேமிப்பு பணமான ரூ 2.5 லட்சத்தை நிவாரண நிதியாக கொடுத்த நிலையில் கோடீஸ்வரரான டோனி இப்படி செய்யலாமா எனவும் விமர்சனம் எழுந்துள்ளது.

இது தொடர்பான பதிவுகள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்