ஈரான் அரசின் முன்னுக்கு பின் முரணான நடவடிக்கை - ஒரே ஈரானிய வீராங்கனை நாட்டை விட்டு வெளியேறினார்...

Report Print Abisha in ஏனைய விளையாட்டுக்கள்

ஈரான் அரசின் முன்னுக்கு பின் முரணான நடிவடிக்கையால், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஒரே பெண் வீராங்கனை நாட்டை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், போலித்தனம், பொய், அநீதி, முகஸ்துதி ஆகியவை நிறைந்த ஈரானின் ஒரு அங்கமாக நான் விரும்பவில்லை என்று 21 வயதாகும் அலிசாதே தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஈரானின் ஒடுக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான பெண்களில் தானும் ஒருவர் என்றும், தனது வெற்றியை ஈரான் அரசு பிரசார கருவியாக பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2016ஆம் ஆண்டில் ரியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் டேக்வாண்டோ-வில் வெண்கல பதக்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் ஈரானிய பெண் வீராங்களை என்ற சாதனையை அவர் படைத்திருந்தார்.

ஈரான் தலைநகர் டெஹ்ரானிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உக்ரைன் தலைநகரை நோக்கி புறப்பட்ட விமானம் அடுத்த சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 176பேரும் உயிரிழந்தனர். மூன்று நாட்களுக்கு பின் ஈரான் தனது தவறால் இது நிகழ்ந்தது என்று ஒப்புக்கொண்டது.

இந்த முன்னுக்கு பின் முரணான பேச்சால் அந்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில், கிமியா அலிசாதெ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...