நியூசிலாந்து சுற்றுப்பயணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஹார்டிக்: தமிழக வீரருக்கு வாய்ப்பு

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

உடற்பயிற்சி தேர்வில் தோல்வியடைந்ததை அடுத்து ஹார்டிக் பாண்ட்யாவிற்கு மாற்றாக தமிழக வீரர் விஜய் சங்கர் அணியில் இடம்பிடித்துள்ளார்.

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 'இந்திய ஏ' அணி, இரண்டு 50 ஓவர் போட்டி மற்றும் 2 நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்த சுற்றுப்பயணத்திற்காக காயத்திலிருந்து மீண்டு வந்த நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்ட்யாவின் பெயர் முதலில் இடம்பிடித்திருந்தது.

ஆனால் மும்பையில் நடத்தப்பட்ட உடற்பயிற்சி சோதனையில் அவர் தோல்வியடைந்ததால், அவருக்கு பதில் தமிழக ராஞ்சி அணியின் கேப்டன் விஜய் சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியாவின் அறிக்கையின்படி, ஹார்டிக் இரண்டு கட்டாய உடற்பயிற்சி சோதனைகளில் தோல்வியுற்றார் மற்றும் அவரது மதிப்பெண்கள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு பொருத்தமானதை விட குறைவாக இருந்தது.

எனவே, அவருக்குப் பதிலாக விஜய் சங்கர் மாற்றப்பட்டார் என தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...