பாதி தாடி, மீசையுடன் இணையத்தில் வைரலாகும் ஜாக் காலிஸ் புகைப்படம்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ் பாதி தாடி, மீசையுடன் இருக்கும் புகைப்படமானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ், அந்த அணிக்காக 166 டெஸ்ட், 328 ஒருநாள் மற்றும் 25 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இவர் புதன்கிழமையன்று தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில், அரை மீசை, தாடியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டார்.

44 வயதான அவர் உண்மையில் தென்னாப்பிரிக்காவில் பரவி வரும், 'Save The Rhino' சவாலை ஏற்று இப்படி செய்துள்ளார். இதன்மூலம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, பணத்திற்காக தன்னுடைய முக மற்றும் மார்பு முடியில் பாதியை எடுத்துள்ளார்.

Save The Rhino என்பது தென் ஆப்பிரிக்காவில் காண்டாமிருகங்களை பாதுகாப்பதற்காக செயல்பட்டு வரும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும்.

இந்த நிலையில் காலிஸின் செயலை பாராட்டி இணையதளவாசிகள் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்