அவருக்கு அந்த தகுதியே இல்லை... அவரை நீக்க வேண்டும்: பிரபல கிரிக்கெட் வீரருக்கு வலுக்கும் எதிர்ப்பு

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக வர்ணனையாளராக செயல்பட்டுவரும் ஹர்ஷா போக்லேவை இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சிரேக்கர் அவமானப் படுத்தியதாக கூறி அவருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

கொல்கத்தாவில் இந்தியா வங்கதேசம் இடையே நடந்து முடிந்த பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் ஹர்ஷா போக்லே வர்ணனையாளராக கலந்துகொண்டார்.

இதே போட்டியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சிரேக்கரும் வர்ணனையாளராக இருந்தார்.

போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது நடைபெற்ற விவாதத்தில் ஹர்ஷா போக்லே விளையாட்டு வீரர்களிடம் பிங்க் பந்து அனுபவம் தொடர்பில் கேட்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

அப்போது குறுக்கிட்ட சஞ்சய் மஞ்சிரேக்கர், அது தேவையே இல்லை. நாங்கள் ஏற்கனவே பல ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம். எங்களிடம் இருந்தே உங்களுக்கு பதில்கள் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

சஞ்சய் பேசியிருப்பது சமூக ஊடகங்களில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது ஹர்ஷா போக்லே கிரிக்கெட் விளையாடாமலே வர்ணனையாளராக வந்திருக்கிறார் என்பதை கிண்டல் செய்யும் விதமாக இருப்பதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

மேலும், ஒரு சிலர் ஹர்ஷா போக்லேவிடம் சஞ்சய் மஞ்சிரேக்கர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சஞ்சய் மஞ்சிரேக்கர் வர்ணனையாளராக இருக்க தகுதியே இல்லை, அவரை நீக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சஞ்சய் மஞ்சிரேக்கர் அண்மை காலங்களில் இது போன்ற கருத்துக்களை கூறி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்