பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களிடமிருந்து பணம் வாங்க மறுத்த இந்திய ஓட்டுநர்: சுவாரஷ்ய சம்பவம்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

அவுஸ்திரேலியாவில் கார் வாடகை கட்டணத்தை வாங்க மறுத்த இந்திய ஓட்டுனரை, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இரவு உணவிற்கு அழைத்து சென்றுள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் 29ம் திகதியன்று ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ஏபிசி வானொலி தொகுப்பாளர் அலிசன் மிட்செல் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஜான்சனிடம் ஒரு சுவாரஷ்யமான சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் பாகிஸ்தான் வீரர்களான ஷாஹீன் ஷா அப்ரிடி, யாசிர் ஷா மற்றும் நசீம் ஷா ஆகியோர் இந்திய ஹோட்டல் ஒன்றிற்கு உணவருந்த ஆட்டோவில் சென்றுள்ளனர்.

ஹோட்டல் வந்தடைந்ததும் ஆட்டோ ஓட்டுநராக இருந்த இந்தியருக்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பணம் செலுத்த முயன்றுள்ளனர். ஆனால் அவர் பணம் வாங்க மறுத்துள்ளார். உடனே அந்த வீரர்கள் தங்களுடன் உணவருந்துமாறு அந்த ஓட்டுனரை விருந்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்