பிங்க் பந்தை பார்க்க முடிகிறதா? இஷாந்த சர்மா அளித்த பதில்... சிரிப்பால் அதிர்ந்த அரங்கம்

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

இந்தியாவில் முதன் முறையாக பகல்-இரவு பிங்க் பந்து டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.

முதல் போட்டியில் படுதோல்வியடைந்த வங்கதேச அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் மோசமாக விளையாடி வருகிறது.

நேற்று தொடங்கிய போட்டியில் முதலில் துடுப்பாடிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 106 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய தரப்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 185 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இந்நிலையில், முதல் நாள் போட்டிக்கு பின் இஷாந்த் சர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நிருபர் ஒருவர் மாலை மற்றும் இரவு நேரத்தில் பிங்க் பந்தை பார்க்க முடிகிறதா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த இஷாந்த், ஆம் பார்க்க முடியும், மைதானத்தில் லைட் போட்டவுடன், பந்தை பார்க்க முடியும் என நகைச்சுவையாக பதிலளித்தார். இதைக்கேட்டு அரங்கத்தில் இருந்த நிருபர்கள் சிரித்தனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்