வித்தியாசமான பந்துவீச்சு முறையில் இணையத்தைக் கலக்கும் இலங்கை வீரர்

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை சுழற் பந்துவீச்சாளர் கெவின் கோத்திகோடா, தனது வித்தியாசமான பந்துவீச்சு முறையால் இணையத்தில் வைரலாகியுள்ளார்.

லசித் மலிங்கா போன்ற வித்தியாசமான முறையில் பந்துவீசும் சிறந்து பந்துவீச்சாளர்களை இலங்கை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் பட்டியலில் தற்போது இணைந்துள்ளார் 21 வயதான கெவின் கோத்திகோடா.

கலேவைச் சேர்ந்த கெவினின் பந்து வீசும் முறையை முன்னாள் தென் ஆப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர் பால் ஆடம்ஸிடன் ஒப்பிட்டுள்ளார் பயிற்சியாளர் தம்மிக சுதர்ஷனா.

அபுதாபியில் நடைபெற்று வரும் டி-10 தொடரில் பங்களா டைகர்ஸ் அணியில் கெவின் கோத்திகோடா விளையாடி வருகிறார்.

தற்போது வரை நான் ஆடம்ஸின் பந்து வீச்சை பார்த்ததே இல்லை, ஆரம்பத்திலிருந்தே நான் இவ்வாறு தான் பந்து வீசி வருகிறேன். இலங்கையின் 13, 15, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்டோருக்கான அணிகளில் விளையாடும் போது இவ்வாறு தான் பந்து வீசினேன்.

ஆரம்பத்தில் டென்னிஸ் பந்தில் என் தந்தையுடன் விளையாடினேன். அப்போதிலிருந்து நான் கிரிக்கெட் விளையாட தொடங்கினேன், அன்று முதலே இவ்வாறு தான் பந்து வீசுகிறேன் என கெவின் கோத்திகோடா தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்