ஹர்பஜன், முரளிதரன் நான் சந்தித்த கடினமான பந்துவீச்சாளர்கள் - ஆடம் கில்கிறிஸ்ட்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

ஹர்பஜன் சிங் மற்றும் முரளிதரன் பந்துவீச்சை சமாளிப்பது தனக்கு கடினமாக இருந்ததாக அவுஸ்திரேலிய முன்னாள் நட்சத்திர வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறிஸ்ட் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் மறக்க முடியாத தருணங்களை பற்றி இணையத்தளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் சந்தித்த கடினமான இரண்டு பந்து வீச்சாளர்களாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மற்றும் இலங்கை அணியின் முத்தையா முரளிதரனை குறிப்பிட்டார்.

அதிலும் இந்தியா-அவுத்திரேலியா அணிகளுக்கு இடையில் 2001ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரை பற்றி பெரிதாக பேசினார்.

நாங்கள் தொடர்ச்சியாக 15 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனைகள் புடைத்திருந்த சமயம். 2001ம் ஆண்டு இந்திய சுற்றுப்பயணத்தின் போது எங்களுடைய அணி 99 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து நின்றது. அப்போது களமிறங்கிய நான் அதிரடியாக விளையாடி 80 பந்துகளில் சதம் அடித்து மூன்றே நாட்களில் வெற்றி பெற்றோம்.

அதிரடியாக விளையாடினால் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என நான் அசாதாரணமாக இருந்தேன். ஆனால் அடுத்த இரண்டு போட்டிகளில் ஹர்பஜன் சிங் பந்து வீச்சில் நாங்கள் அனைவருமே விக்கெட்டுகளை பறிகொடுத்து தோல்வியடைந்தோம்.

அதில் இருந்து எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் அவர் பழிக்குப்பழி வகையிலேயே திகழ்ந்தார் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்தியாவின் முதல் டெஸ்ட் ஹாட்ரிக் உட்பட மூன்று போட்டிகளில் 32 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்பஜன் அந்த தொடரின் நாயகனாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்